இன்றைய ராசிபலன் 21-02-2018

மேஷம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பிரச்னை எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

ரிஷபம்: உற்சாகமான நாளாக இருக்கும். உங்கள் வார்த்தைகளும் செயல்களும் சுற்றியிருப்பவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்யும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத் தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், உரிய சலுகை கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சக பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மிதுனம்
: பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பில்லை. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்: காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும்.உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதுடன், அதனால் சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையில் அபிவிருத்தி ஏற்படுவதுடன் கூடுதல் லாபமும் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

சிம்மம்: இன்று புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவினாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் உங்கள் பணிகளை முடிப்பதில் இடையூறு ஏற்படும் என்பதால், கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி
: இன்று வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கூடுதல் கவனமாக இருக்கவும்.

துலாம்: இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.

விருச்சிகம்: அனுகூலமான நாளாக இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் உதவி கேட்டு வருவார். அலுவலகத்தில் உங்கள் பணிகளை முடிப்பதில் சக பணியாளர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு: உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

மகரம்: தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். காலையிலேயே குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கும்பம்: எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள்ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மீனம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.