தமிழ் அரசுக் கட்சி தேசிய ரீதியில் இரண்டாம் நிலை

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி வடக்கு மாகாணத்தில் மட்டும் போட்டியிட்ட நிலையிலும் தேசிய ரீதியில் இரண்டாம் நிலையினை எட்டிப் பிடித்துள்ளது. 
பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற 338 உள்ளூராட்சி மன்றங்களிற்கான தேர்தலிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமே போட்டியிட்டது. இந்த நிலையிலும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிடித்துள்ளது.
இந்த வகையில் மொத்தம் 338 சபைகளில் இடம்பெற்ற தேர்தலில் 231 சபைகளில் மகிந்த ராஜபக்சா தலமையிலான கட்சியினர் அதிகப்படியான ஆசணங்களை பெற்றுள்ளபோதிலும் 88 சபைகளில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளவில்லை. இதேநேரம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழர் பிரதேச சபைகளில் மட்டும் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியானது மொத்தம் 40 சபைகளில் பெரும்பான்மையை பெற்ற இரண்டாவது கட்சியாக தேசிய ரீதியில் இடம்பிடித்துள்ளது.
இதேபோன்று மூன்றாவது இடத்தினை பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியானது 
37 சபைகளில் பெரும்பான்மையை பெற்றுள்ளதோடு சுதந்திரக் கட்சி 6 சபைகளில் மட்டும் பெரும்பான்மையை பெற்று 4வது இடத்தினையும் பிடித்துள்ளது. இதேவேளை 5வது இடத்தைப் பிடித்த 
முஸ்லீம் காங்கிரஸ் 5 சபைகளில் வெற்றிபெற்றுள்ளனர். 
இதேசமயம் 3 சபைகளை சுயேட்சைக் குழுக்களும் 3சபைகளை இ.தொ.காங்கிரசும் , 
தேசிய மக்கள் காங்கிரஸ் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலா இரண்டு சபைகளையும் கைப்பற்றியுள்ளதோடு 
ஏனையவை 9 சபைகளையும் கைப்பற்றியுள்ளதாக தேர்தல் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like