குட்டை குழம்பிய நிலையிலும் சற்றும் கலங்காத ரணில்

நாட்டில் அரசியல் நெருக்கடியொன்று தீவிரம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இயல்பு நிலையில் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

அதன் பிரகாரம் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் தனது அலரிமாளிகை உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இராப்போசன விருந்துபசாரம் நடத்தியுள்ளார்.

இந்த விருந்துபசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வௌியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும் என்றும் எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் மாற்றம் ஓன்று ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like