இன்றைய ராசிபலன் 19-02-2018

மேஷம்: உற்சாகமான நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மாலையில் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்
: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்பார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும் என்றாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், ஆதாயம் தருவதாகவும் அமையும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பம் தொடர்பான வெளியூர்ப் பயணம் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். அதிகாரிகளால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வருமென்றாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்: தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். நீண்டநாளாகத் தள்ளிப்போன குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் கொள்ளாமல் இருப்பது அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வும்,. எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.

கன்னி: எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். கூடுமானவரை அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவையை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி வரும்.

துலாம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சக பணியாளர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்: காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனை சற்று குறைவாகத்தான் இருக்கும். ஆனால், பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் தேவையறிந்து அவருக்கு உதவுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்: தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் சில முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் ஏற்படும் நெருக்கடியை சமயோசிதமாகச் சமாளித்து, சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பம்: தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் வீட்டில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக் கூடும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

மீனம்: இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். லாபமும் சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

Get real time updates directly on you device, subscribe now.