ஜனாதிபதியின் பொறுப்பு பற்றி கூறும் கூட்டு எதிர்க்கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியை அமைக்க தேவையான ஆதரவை வழங்குவதாக கூட்டு எதிர்க்கட்சி ஏற்கனவே இணங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் பேசும் போதே சேமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் கூட்டு எதிர்க்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொறுப்பு பற்றி கூறும் கூட்டு எதிர்க்கட்சி

Get real time updates directly on you device, subscribe now.