தவறுதலாக உயிருடன் புதைக்கப்பட்ட பெண்!! 11 நாட்கள் உயிருக்குப் போராடிய சோகம்..!!

தவறுதலாக உயிருடன் புதைக்கப்பட்ட பெண்ணொருவர், தனது சவப் பெட்டியை விட்டு வெளிவர பதினொரு நாட்கள் போராடி முடியாத நிலையில் உயிரை விட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரொசெஞ்சலா அல்மேதா (37) என்ற பெண் பிரேஸிலைச் சேர்ந்தவர். சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், கடந்த 28ஆம் திகதி மரணித்துவிட்டதாக வைத்தியர்களால் அறிவிக்கப்பட்டார்.இதையடுத்து, மறுதினம் 29ஆம் திகதி இவரது ‘உடல்’ ஈமச் சடங்குகளின் பின் புதைக்கப்பட்டது.

என்றபோதும், மயானத்துக்குச் சற்றுத் தொலைவில் வாழும் மக்கள் சிலர், குறித்த சமாதியில் இருந்து சத்தம் வரவே, அது குறித்து கடந்த ஒன்பதாம் திகதி – அதாவது, ரொசெஞ்சலா புதைக்கப்பட்ட பதினொரு நாட்களின் பின் – ரொசெஞ்சலாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது சமாதி தகர்க்கப்பட்டு சவப்பெட்டி வெளியே எடுக்கப்பட்டது. எனினும், அதற்குள் அவர் ‘உண்மையாகவே’ மரணித்து விட்டார்.சவப்பெட்டியைத் திறந்து பார்த்த உறவினர்கள், ரொசெஞ்சலாவின் உடல் சூடாக இருப்பதை உணர்ந்தனர்.

சவப்பெட்டியின் சில ஆணிகள் கொஞ்சம் தளர்ந்திருந்ததையும் ரொசெஞ்சலாவின் மூக்கிலும் காதுகளிலும் இருந்த பஞ்சுத் துண்டுகள் பிடுங்கப்பட்டிருந்ததையும் கண்டனர். அத்துடன், ரொசெஞ்சலா தனது தலையாலும் கைகளாலும் சவப்பெட்டியைத் திறக்க முயற்சி செய்ததற்கு ஆதாரமாக கைகளிலும் நெற்றியிலும் இரத்தக் கீறல்கள் இருந்ததையும் கண்டனர்.இதையடுத்து, உயிருடன் இருந்த ரொசெஞ்சலாவின் மரணித்து விட்டதாகக் கூறிய வைத்தியசாலை மீது அவரது உறவினர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like