யாழ் மாநகர சபையில் ஆர்னல்ட்டுக்கு எதிராக களமிறங்கிய சட்டத்தரணி மணிவண்ணன்!! பரபரப்பு மிக்க ஆட்டம் ஆரம்பம்!!

தமிழ்த் தேசி­யப் பேரவை சார்­பாக யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் வேட்­பா­ள­ராக சட்­டத்­த­ரணி மணி­வண்­ணனை நாம் கள­மி­றக்க உள்­ளோம்.எமது கட்­சி­யைத் தவிர்ந்து ஏனைய கட்­சி­கள் மாந­கர சபை­யில் பெரும்­பான்­மையை நிரூபித்­தால் நாம் அவர்­க­ளுக்­குப் பக்­க­ப­ல­மாக இருப்­போமே தவிர குழப்­ப­மாட்­டோம் என தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் வேட்­பா­ள­ராக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் ஆனோல்ட்டை தெரிவு செய்­துள்­ளது என்று அறிந்­தேன்.

எமக்­கும் ஆனோல்ட்­டுக்­கும் தனிப்­பட்ட ரீதி­யில் எந்த முரண்­பா­டு­க­ளும் இல்லை. அவர் தேர்­த­லின்­ போது மத ரீதி­யாக சில விட­யங்­களை செய்­தார். எமது மக்­களை பிள­வு­ப­டுத்­தும் செய­லா­கவே அதை நாம் பார்த்­தோம்.வடக்கு மாகாண சபை­யில் உறுப்­பி­ன­ராக அவர் இருந்­த­போது தமிழ் மக்­க­ளால் போற்­றப்­ப­டும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ரா­கப் பல சதி­களை மேற்­கொண்­டி­ருந்­தார்.

தனது எஜ­மா­னான சுமந்­தி­ர­னின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­யவே அவற்றை மேற்­கொண்­டார் என்­பதை அனை­வ­ரும் அறி­வார்­கள். இவ­ரின் இப்­ப­டி­யான செயற்­பா­டு­கள் தனிப்­பட்ட பிரச்­ச­னை­கள் அல்ல. ஒட்டு மொத்த தமிழ் மக்­க­ளின் பிரச்­சனை ஆகும்.யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்கு அவர் பத­விக்கு வந்து தனது பெரும்­பான்­மையை காட்­டி­னால் நாம் அவ­ருக்கு பக்­க­ப­ல­மாக இருப்­போம்.

நாம் அவ­ரின் நிர்­வா­கத்­து­டன் பொறுப்­பு­டன் செயற்­ப­டு­வோம். அவ­ரது கட்­சி­யி­லும் ஏனைய கட்­சி­யி­லும் உள்ள பல வேட்­பா­ளர்­கள் எமக்கு ஆத­ரவு தரு­வோம் என்று கூறி­யுள்­ள­னர். யார் பெரும்­பான்­மையை நிரு­பிக்­கின்­றர்­களோ அவர்­கள் நிர்­வா­கத்தை நடத்த வேண்­டும்.

நாம் ஆரம்­பத்­தில் ஐந்து உள்­ளு­ராட்சி சபை­களை நிர்­வ­கிப்­பது என தீர்­மா­னித்து இருந்­தோம். இப்­போது எமக்கு ஆத­ரவு பெருகி வரு­வ­தால் நாம் மேலும் பல சபை­களை நிர்­வ­கிப்­பது தொடர்­பாக முயற்­சித்து வரு­கின்­றோம். எனவும்தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் மேலும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like