கொலை, கொள்ளை மற்றும் மோசடிக்காரர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கியிருந்தால், தற்போதைய நிலமை ஏற்பட்டிருக்காது, வெறுமனவே, மகிந்தவிற்கான வாக்களிப்பு எமக்கு கிடைத்த எச்சரிக்கையே, அரசாங்கம் மக்களின் குறைபாடுகளை எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க யாழில் தெரிவித்தார்.

யாழிற்கு வருகை தந்திருந்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று (17) வடமாகாண பெற்றோலிய கூட்டுத்தாபன முகவர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பிரதமரை மாற்றுவது தொடர்பாக என்ன அரசியல் மாற்றம் செய்யப்பட வேண்டுமா? மற்றும் பிரதமர் மொட்டு கட்சியுடன், இணைவது சரியதான என ஊடகவியலாளாகள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இது பாராளுமன்ற தேர்தலோ அல்லது ஜனாதிபதி தேர்தலோ அல்ல. இதில் தடுமாறுவதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமில்லை. ஆனால், மொட்டுக்கு வாக்களித்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
கொலை கொள்ளை மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தால், இந்த நிலமை வந்திருக்காது. இது சமபந்தமாக அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். இவை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமருமே பார்க்க வேண்டும். வெறுமனவே எமக்கு கிடைத்த எச்சரிக்கை. இந்த தேர்தல் தொடர்பாக கிடைத்த இறுதி முடிவு தொடர்பாக குறைபாடுகளை நிறைவேற்ற வேண்டும். 
எதிர்வரும் காலங்களில், ஜனாபதியோ, பிரதமரோ கட்சியைப் பார்த்து செயற்படாமல், மக்களை பார்த்து செயற்பட வேண்டும். மக்களை பார்த்து செயற்படும்போது, குறைபாடுகள் வந்தால், இருவரும் பேசி நிவர்த்தி செய்ய முடியும்.
இப்போது ஒரு மாற்றம் வந்துள்ளதென பெரிய மாற்றம் செய்யப்போவதில்லை. தேவையற்றவர்களுடன், தேவையற்ற சம்பந்தங்களை வைத்து நாட்டினை கவிழ்கலாம் என நினைப்தும், கூடாத பக்கம் நாட்டினை திசை திருப்ப நினைப்பர்களுக்கு அடுத்த தேர்தலில் நல்ல பாடம் கற்பிக்கப்படும். பொது மக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசாங்கம் தான். ஆவற்றினை சரியான வகையில், கொடுக்க வேண்டும். 
மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் சரியான வகையில் செயற்பட வேண்டும். இரண்டு அரசாங்கங்களும் குழப்படைய வேண்டிய அவசியமில்லை. நாட்டு மக்களுக்கு விதோரமான செயற்படுவர்களுக்கு சரியான முறையில் பாடம் புகட்ட வேண்டுமென்றார்.