இன்றைய ராசிபலன் 17-02-2018

மேஷம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதர வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் பொறுமை அவசியம். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், எளிதாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சமாளிப்பீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் உடல் அசதி உண்டாகும்.

மிதுனம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சி எதுவானாலும் யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள். அலுவலகப் பணிகளில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதியும் மனதில் சோர்வும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.

கன்னி: அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் அதனால் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

துலாம்: மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக பணியாளர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.


தனுசு: உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். மனடில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடும்.

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் எதிர்பாராத நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்

கும்பம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும்.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.


மீனம்
: இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.