கல்வியமைச்சின் அசிரத்தையால் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு

கல்வியமைச்சின் அசிரத்தையான செயற்பாடொன்றின் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

2014ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி இலங்கையில் ஆசிரியர் ​சேவைக்கான புதிய பிரமாணக் குறிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் ஆசிரியர்களை சேவையில் உள்ளீர்த்தல், சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வுகள் போன்ற விடயங்களுக்கான இடைக்கால கால கட்டம் ஒன்று 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் காரணமாக குறித்த காலப்பகுதிக்குள் இலங்கை முழுவதும் உள்ள ஆசிரியர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க முடியாமற் போனதன் காரணமாக இடைக்கால காலப் பகுதியை 2019 ஒக்டோபர் 24ம் திகதி வரை நீடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை உரிய நேரத்தில் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்காமையின் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் தங்கள் வருடாந்த சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

எனவே கல்வி அமைச்சு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கல்வியமைச்சின் அசிரத்தையால் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு