109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக யாழ் ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதி மன்றங்களினால் குறித்த 109 மீனவர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்

தமிழகம் இராமநாதபுரம்,புதுக்கோட்டை, ஜகதாபட்டினம,கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த குறித்த மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதமளவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்

இன்றையதினம் யார் ஊர்காவற்துறை நீதிமன்றினால் 79 மீனவர்கள் மற்றும் யாழ் பருத்தித்துறை நீதிமன்றினால் முப்பது மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்

குறித்த மீனவர்கள் இன்று யாழ் இந்திய உயர்ஸ்தானிராலய்அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை ஓரிரு தினங்களில் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தனிகர் நடராஜன் தெரிவித்தார்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like