சுபாஸ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட காதல் வாழ்க்கை

1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு சிகிச்சைக்காக சுபாஸ் சந்திர போஸ் செல்ல நேரிட்டது.

வியன்னாவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தாலும் அங்குள்ள இந்திய மாணவர்களை ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காக போராட முடிவு செய்தார்.

அந்த நேரம் ஒருவர் “இந்தியாவின் துயரம்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத சொல்ல அதை ஏற்றுக்கொண்ட போஸ் புத்தகத்தை எழுதுவதற்கும் அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கும் ஒரு உதவியாளர் வேண்டி 23 வயதான எமிலி சென்கல் என்ற பெண்ணை பணியில் சேர்த்துக்கொண்டார்.

37 வயதான சுபாஷ் சந்திர போஸின் முழு கவனமும் 1934 ஆம் ஆண்டு இந்திய விடுதலையை பற்றியே இருந்தது. அதுவரை, எமிலி என்பவர் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதை அறியாமல் இருந்தார் போஸ்.
காதலில் விழுந்த சுபாஸ் சந்திர போஸ்

’சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பேரரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்’ என்ற புத்தகமொன்றில். சுபாஷ் சந்திர போஸுக்கு பல காதல் விருப்பங்களும், திருமணத்திற்கான பல வாய்ப்புகளையும் கொண்டிருந்தார். ஆனால், அவர் யாரையும் ஆர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எமிலியின் அழகு அவரை கவர்ந்துவிட்டது என்று அப்புத்தகத்தில் உள்ளது

சுபாஷ் சந்திர போஸே முதலில் காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர் 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேக்கியாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவர்களின் காதல் சிறப்பான நிலையை அடைந்தது என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காதலிக்கு கடிதம் எழுதிய போஸ்

காதலிக்க தொடங்கிய பின் போஸ் மற்றும் எமிலி கடிதம் மூலம் காதல் வளர்த்தனர் அக்கடிதத்தில் எமிலி அவரை திரு.போஸ் என்றும், போஸ் அவரை திருமதி. சென்கல் அல்லது ஷெல்லி என்று அழைத்துவந்தனர்

“தங்கள் காதலின் தொடக்க கட்டத்திலேயே இது மிகவும் கடினமான ஒன்று என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் என்பது அவர்கள் இருவரும் எழுதிக்கொண்ட கடிதத்திலிருந்து தெரிய வருகிறது”.

1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி எழுதப்பட்டுள்ள கடிதமொன்று இவ்வாறு தொடங்குகிறது, “என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?.”

“எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்” என்று சுபாஷ் சந்திர போஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தின் கடைசியில், “நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்” என்று போஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை படித்ததும் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், எமிலி அதை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொண்டார்.
போஸ் – எமிலி திருமணம்

1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் ஆஸ்திரியாவிலுள்ள தங்கள் இருவருக்கும் விருப்பமான ஓர் இடத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என போஸின் தம்பி பேரனான கிருஷ்னா போஸ் தெரிவித்தார் ஆனால், தங்களது திருமணம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்த தம்பதியர் திருமணத்தை தவிர வேறெந்த தகவலையும் கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.


எமிலிக்கு புத்தகவாசிப்பு பற்றி போஸின் அறிவுறை

போஸ் எமிலிக்கு புத்தகங்களை புத்தகங்களை பரிசளிப்பதை வழக்கமாக வைதிருந்தனர்.

1937 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி எமிலிக்கு சுபாஷ் எழுதிய கடிதத்தில், “இந்தியாவைப் பற்றி சில கட்டுரைகளை நீ எழுதியுள்ளாய். ஆனால், இந்த புத்தகங்களை உனக்கு வழங்குவதற்கு தேவையுள்ளதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நீ அவற்றை படிப்பதேயில்லை” குறிப்பிட்டுள்ளார்.

“நீ தீவிரமாக இருக்காத வரை, வாசிப்பதில் ஆர்வம் வராது. வியன்னாவில் நீ பல தலைப்பிலான நூல்களை பெற்றிருக்கிறாய். ஆனால், அவற்றை நீ தொடர்ந்து பார்க்கவில்லை என்று எனக்குத் தெரியும்.” என்று எழுதியுள்ளார்.


மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்த திருமண வாழ்வு

இருவரின் அன்பின் விளைவாக 1942 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று அனிதா எனும் பெண் குழந்தை பிறந்தது. சுபாஷ் சந்திர போஸ் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வியன்னாவிற்கு சென்று எமிலியையும், அனிதாவையும் சந்தித்ததே அவர்களின் கடைசி சந்திப்பாகும்.

ஆனால், சுபாஷ் சந்திர போஸின் நினைவுகளுடன் 1996 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த எமிலி, தங்களது மகள் அனிதா போஸை ஜெர்மனியின் பிரபலமான பொருளாதார வல்லுனராக வளர்த்தெடுத்தார்.