கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை மீட்க நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.

பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுப்பதற்கான போதுமான சட்டங்களை நடைமுறைப்படுத்தாத குற்றச்சாட்டுக்களின் பேரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டே இலங்கைக்கு இது தொடர்பான எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்த போதும் அரசாங்கத்தின் அசிரத்தை காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் தற்போது இலங்கையை கறுப்புப் பட்டியலுக்குள் உள்ளடக்கியுள்ளது.

கெசினோக்கள், சொத்துக்கள் மற்றும் காணி வர்த்தகம், இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகம் என்பவற்றின் ஊடாக குறித்த செயற்பாடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை மீட்க நடவடிக்கை

இந்த நிலையில் குறித்த பட்டியலில் இருந்து இலங்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் மீட்டெுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி செயற்பாட்டுத் திட்டமொன்றை வகுத்துள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் காலத்தில் கசினோ நிலையங்கள், ரியல் எஸ்டேட் வர்த்தகம் மற்றும் மாணிக்கக் கல் வர்த்தகம் என்பவற்றில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.