கூட்டு வன்புணர்வு வழக்கில் இராணுவக் கப்டன் கைது!

மருத்துவத் தாதியொருவரை கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் இராணுவக் கப்டன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில் பணிபுரியும் மருத்துவத் தாதியொருவரை கொழும்பு இராணுவ மருத்துவமனை மருத்துவர் ஒருவர் காதலிப்பதாக ஏமாற்றி தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்திருந்தார்.

குறித்த மருத்துவத் தாதியின் முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவ மருத்துவர் மற்றும் அவரது சாரதியான கோப்ரல் தர சிப்பாய், மருத்துவரின் நண்பரான இராணுவ பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் மன்னாரில் பணியாற்றும் இராணுவப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கப்டன் ஒருவரும் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்ட பொலிஸார் குறித்த இராணுவ கப்டனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலுக்கு அனுப்பியுள்ளனர்.
கூட்டு வன்புணர்வு வழக்கில் இராணுவக் கப்டன் கைது!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like