தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இது தான்! தெளிவுபடுத்தினார் மாவை

திர்காலத்தில் தென்னிலங்கையில் எவ்வித விளைவுகள் ஏற்பட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தின் அனுசரணையுடன் பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் உள்ள சபைகளுக்கான தலைவர் உபதலைவர்கள் தெரிவு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இன்று இடம் பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகளின்படி பெரும்பாலான சபைகளை மகிந்த ராஜபக்ச அணியினர் கைப்பற்றியுள்ளனர். இதனுடைய தாக்கம்.. ஏனைய தேசியக் கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எந்த ஒரு கட்சியும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் எப்பொழுதும் இதே போன்ற பலத்தை கொண்டிருக்கும் என்று சொல்லமுடியாது.

தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அணுகல் முறையும் சர்வதேசத்தின் அனுசரணையும் இருக்கின்றது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் தென்னிலங்கையில் எவ்வித விளைவுகள் ஏற்பட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தின் அனுசரணையை ஏற்று அதற்கு பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாந்திசிறிஸ்கந்தராசா, வடமாகாண அமைச்சர் சிவனேசன், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இது தான்! தெளிவுபடுத்தினார் மாவை