பொதுஜன பெரமுனவின் வெற்றியை மறக்கடிக்க வைக்க முயற்சி?

பொதுஜன பெரமுன கட்சி பெற்றுள்ள வெற்றியை பொதுமக்கள் மத்தியில் மறக்கடிக்க வைப்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாக டளஸ் அலஹப்பெரும எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று மாலை பொரளை என்.எம். பெரேரா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான தனி அரசாங்கம் அல்லது பிரதமர் ரணில் இல்லாத அரசாங்கம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.

இது அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டுள்ள மிகத்திறமையான பிரச்சாரங்களில் ஒன்றாகும்.அதன் மூலம் உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்றுள்ள வெற்றி குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசப்படுவதை தடுப்பதே அரசாங்கத்தின் ​நோக்கமாகும்.

ஆனால் தேர்தலுக்கு முன்னர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தது போன்று ஜனாதிபதியும் பிரதமரும் காதல் ஜோடி போன்றவர்கள். சிறு சிறு சச்சரவுகள் வௌிக்காட்டப்பட்டாலும் அவர்கள் பிரிந்து அரசாங்கத்தை விட்டும் விலக மாட்டார்கள் என்றும் டளஸ் எம்.பி. தொடர்ந்தும் தெரிவித்துள்ளார