திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வு!

வரலாற்று புகழ்மிக்க பாடல்பெற்ற ஈஸ்வரங்களில் முதன்மையான திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் நேற்று இரவு மஹா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. பூஜை வழிபாடுகளுடன் கலை நிகழ்வுகளும் வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருகோணமலை பிரதேசத்திலுள்ள பாடசாலை, கலையக மாணவர்களின் சிறப்பு நடனங்கள் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

படங்கள் – உதயரூபன்