பௌத்த பிக்குமாரை தேர்தலில் களமிறக்கிய மகிந்த அணி

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் பௌத்த பிக்குமார்கள் பலரும் மகிந்த அணி சார்பில் களத்தில் இறங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் பலாகல பிரதேச சபையில் முதல்தடவையாக மகிந்த அணி சார்பில் பௌத்த பிக்கு ஒருவர் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

கிரிந்திவத்தை விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய கலோஹகஹஎல சாரானந்த தேரர் என்பவரே அவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். இவர் பலாகல பிரதேச சபையின் 05ம் வட்டார தானியகம வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.,

அதே போன்று கண்டி மாவட்டத்தில் யடிநுவர பிரதேச சபையிலும் மஹிந்த அணி சார்பில் பௌத்த பிக்கு ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

யடிநுவர பிரதேச சபைக்குட்பட்ட பிலப்பிட்டிய வட்டாரத்தில் போட்டியிட்ட பிலப்பிட்டிய விசுத்தாராம விகாரையின் விகாராதிபதி நிகவெரட்டியே தியகம தம்மரத்ன தேரர் என்பவேர அவ்வாறு வெற்றி பெற்றுள்ளார்.,

இவர்கள் தவிர்த்து இன்னும் பல தேரர்கள் நாடுதழுவிய ரீதியில் மகிந்த அணியில் போட்டியிட்டிருந்ததுடன், மேலும் பலர் மகிந்த அணியின் வெற்றிக்காக களமிறங்கி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like