உள்ளூராட்சித் தேர்தலில் ஜே.வி.பி.யும் முன்னேற்றம்

உள்ளூராட்சித் தேர்தல்களில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதை தேர்தல் முடிவுகள் வௌிக்காட்டியுள்ளன.

கடந்த 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதிலும் இருந்து 242,502 வாக்குகளைப் பெற்று 74 உறுப்பினர்களையும் பெற்றிருந்தது.

அதன் பின்னர் நடைபெற்றிருந்த 2015 பொதுத்தேர்தலின் போது ஜே.வி.பி. 543,944 வாக்குகளைப் பெற்று 4.67 வாக்கு வீதத்துடன் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்திருந்தது.

இம்முறை தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்புமுறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது அக்கட்சி நாடு முழுவதிலும் இருந்து 693, 875 வாக்குகளையும் 431 உறுப்பினர்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.

அத்துடன் இம்முறை அக்கட்சியின் வாக்குவீதம் 6.37 வீதமாக அதிகரித்துள்ளது.

இதே போன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியும் போட்டியிட்ட ஏழு மாவட்டங்களிலும் உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சித் தேர்தலில் ஜே.வி.பி.யும் முன்னேற்றம்