தேர்தல் முடிவுகளின் எதிரொலி! அமைச்சர் கபீர் ஹாசீம் இராஜினாமா?

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியினை அமைச்சர் கபீர் ஹாசீம் இராஜினாமா செய்யவுள்ளார்.

ஒரு நிபந்தனையின் கீழ் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். கட்சியின் மற்றைய பதவிகளில் இருக்கும் ஏனையவர்களும் இராஜினாமா செய்ய வேண்டும்.

அப்போது மாத்திரமே தனது இராஜினாமா செல்லுபடியாகும் என்ற நிபந்தனையை அமைச்சர் கபீர் ஹாசீம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தனது இராஜினாமா கடித்தை கட்சியின் தலைவர் பிதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சியின் தலைமைப்பொறுப்புக்கு தற்காலிகமாக நியமிக்கும் படியும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளின் எதிரொலி! அமைச்சர் கபீர் ஹாசீம் இராஜினாமா?

Get real time updates directly on you device, subscribe now.

You might also like