ஊசலாடத் தொடங்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிமின் சொந்த ஊரான மாவனல்லையில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ள வெற்றி ஊசலாடத் தொடங்கியுள்ளது.

மாவனல்லை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் பொதுஜன பெரமுண கட்சியும் தலா பதினாறு ஆசனங்களைப் பெற்றுள்ளன.

இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 830 மட்டுமே.

இந்நிலையில் இரு கட்சிகளிலும் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில் அங்கு ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாத நிலையில் சிக்கியுள்ளன.

மாவனல்லையில் சுதந்திரக் கட்சி ஐந்து உறுப்பினர்களையும் ஜே.வி.பி. , சுயேட்சைக் குழு-01, ஜாதிக ஜனதா பக்சய என்பன தலா ஒரு உறுப்பினரையும் வென்றுள்ளன.

இதன் காரணமாக எந்தவொரு கட்சி ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் இன்னொரு கட்சியின் துணை தேவைப்படுமளவுக்கு அங்கு சிக்கல் எழுந்துள்ளது.

எனினும், சுதந்திரக் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.