தென்னிலங்கையின் மாறாத விசுவாசம்! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திரும்புமுனைகளுடன் இன்றைய மணித்துளிகள் நகர்ந்து செல்கின்றன.

2015ல் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து கடந்து மூன்று வருடங்களாக ராஜபக்ஷர்களினால் வகுக்குப்பட்ட மாற்று நடவடிக்கைகளுக்கு இன்று மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

பறிபோன அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்ட ராஜபக்ஷகள் அதற்கான ஆணையை முழுமையாக பெற்றுள்ளதாகவே இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.

ராஜபக்ஷ மீண்டும் இலங்கையை முழுமையாக ஆட்சி செய்வதற்கு தென்னிலங்கை மக்கள் விரும்பம் கொண்டுள்ளதாக தமது ஜனநாயக கடமைகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

இந்நிலையில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை போட்டியிட வைப்பது இன்றுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி ஆரம்பித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை மக்களின் ஆணையை அடுத்து கோத்தபாய ராஜபக்ஷ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது அமெரிக்க குடியுரிமையை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் கோத்தபாய தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் தற்போது வரையில் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையின் அரசியலமைப்புக்குட்ட சிறிய தேர்தலாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உள்ளபோதும், ஒரு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் அளவுக்கு ஆதீக்கம் செலுத்தியுள்ளது.

நேற்றைய வாக்களிப்பில் மொத்தமாக சுமார் 65 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இதில் சுமார் 45 வீதமான வாக்குகளை மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டால் வெற்றி பெறுவது உறுதி என ராஜபக்ஷ தரப்பு நம்புகிறது.

கோத்தபாய இராணுவத்தினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளமையால் ஜனாதிபதி கனவு ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டதொன்றாக ராஜபக்ஷ ரெஜிமென்ட் நம்புவதாக அவர்களுக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த நிலையில், அவரின் ஒட்டுமொத்த குடும்பம் அரசியல் ரீதியில் பின்னடைவை சந்தித்தனர்.

அப்படியானதொரு மாற்றியமைக்கும் முகமாக இன்றை பாரிய வெற்றி ராஜபக்ஷ குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனி ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ராஜபக்ஷர்களின் ஒவ்வொரு நகர்வும் அமைந்திருக்கும் என்பது யதார்த்தமாகும்.