கொழும்பின் முதல் பெண் மேயரானார் ரோசி சேனாநாயக்க

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது.

இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாநகரசபையில் போட்டியிட்ட ரோசி சேனாநாயக்க கொழும்பு மாநகரசபை வரலாற்றில் முதல் பெண் மேயராக தெரிவு செய்யப்படவுள்ளார்.

கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி 131,353 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு 60 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 60097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 23 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31,421 வாக்குகளையும், ஜே.வி.பி 14,234 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பின் முதல் பெண் மேயரானார் ரோசி சேனாநாயக்க