பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்க தயாராகிறது மஹிந்த அணி!

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் பொதுஜன பெரமுன முன்னிலை வகித்து வரும் நிலையில், முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களின் நம்பிக்கையை மஹிந்த ராஜபக்ஷ வென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொதுஜன பெரமுன, அதன் பிரகாரம் முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த தேர்தலின் மூலம் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்லுக்கு இரண்டு வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலை அறிவித்தார். அடுத்த பொதுத் தேர்தல் எதிர்வரும் 2020ஆண்டு நடைபெறவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு காணப்பட்டதை விட, தற்போதைய அரசாங்கத்திற்கான ஆதரவில் சரிவு நிலையே ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி முன்கூட்டிய தேர்தலுக்குச் செல்லும் முன்னைப்பில் மஹிந்த அணி ஈடுபடுகிறது.