தமிழ் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்கின்றோம் : நாமல்

தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம். அவர்களோடு மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் நுட்பமாக ஆராய்கின்றோம். இந்த நாட்டின் அத்தனை குடிமக்களுக்காகவும் பேதமின்றி ஓய்வின்றிச் சேவையாற்றக் காத்திருக்கிறோம்”.என மேலும் குறிப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கும் வேளையில் நாமல் ராஜபக்ஷவின் இக்கருத்தானது எதிர்கால அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடும்.

இந்நிலையில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுக்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொரும்பாலன இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம். அவர்களோடு மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் நுட்பமாக ஆராய்கின்றோம். இந்த நாட்டின் அத்தனை குடிமக்களுக்காகவும் பேதமின்றி ஓய்வின்றிச் சேவையாற்றக் காத்திருக்கிறோம் #SriLankaElection #SriLankaPolls #lka

— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 11, 2018