வவுனியா வடக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா வடக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசு கட்சி வசமாகியுள்ளது.

12,166 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் 9985 வாக்காளர்களே தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இவற்றினுள் 166 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்றைய தினம் காலை ஏழு மணியளவில் ஆரம்பமாகியிருந்த உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கை மாலை நான்கு மணியளவில் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like