முடிவுகளை வெளியிடும் இயந்திரத்தில் கோளாறு! திணறும் தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிடும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நோக்கில் நிறுவப்பட்டிருந்த இயந்திரக் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், ஊடகங்களுக்கு தேர்தல் முடிவுகளை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கோளாறுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் முன்னெச்சரிக்கை வழங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் ஊடக நிறுவனங்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றன, குறிப்பாக புள்ளி விபர ரீதியில் தகவல்களை வெளியிட முடியவில்லை என குறிப்பிடப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like