வடக்கு- கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி ஆட்சி

வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது.

புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பாலான இடங்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிய கட்சிகளும், தேசியக் கட்சிகளும் வடக்கு, கிழக்கில் விகிதாசார ஒதுக்கீட்டில் கணிசமான ஆசனங்களை வென்றுள்ளன.

இதனால், யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் தொங்கு சபைகளே அமையவுள்ளன.

ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டாக அல்லது, இணைந்தே சபைகளை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.