உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாவதற்கான காரணம் வெளியாகியது

வாக்குகள் மீள எண்ணப்படுவதனால், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில பிரதேச சபைகள், மாநகரசபைகள் மற்றும் நகரசபைகளின் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமென சில கட்சிகள் கோரியதனால், முடிவுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக வாக்குகளை மீள எண்ணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகளை இன்றைய தினம் இரவு 9.00 மணியளவில் வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது.

இந்த கால தாமதம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.

இதேவேளை, அதிகாரபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, தெற்கில் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.