வவுனியா வடக்கு பிரதேசசபை 8 வட்டாரங்களையும் வெற்றி கொண்டது கூட்டமைப்பு!! இரு ஆசனங்கள் மஹிந்தவுக்கு!

வவுனியா வடக்கு பிரதேச சபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, நான்கு சிங்கள வட்டாரத்திலும் மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜனபரமுன வெற்றிபெற்றுள்ளதுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தினை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்றவர்களின் முழு விபரம் இதோ….

வவுனியா வடக்கு பிரதேசசபை மாமடு (ஒலுமடு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெயசுதாகர் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேச சபை சம்பத்நுவர வட்டாரம் பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை எத்தாவெட்டுணுவெல வட்டாரம் பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை கல்யாணபுர பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை கஜபாபுர பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை பட்டிக்குடியிருப்பு வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செந்தூரன் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை பரந்தன் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவராசா வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை நெடுங்கேணி வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியேந்திரன் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை குளவிசுட்டான் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சி. அருட்செல்வம் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை சின்னடம்பன் வட்டாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்) சஞ்சுதன் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை புளியங்குளம் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோகராசா வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை கனகராயன்குளம் தெற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ந.விநாயகமூர்த்தி வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை கனகராயன்குளம் வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ச.தணிகாசலம் வெற்றி.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like