இலங்கை மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக 56 வயதுடைய பெண்ணுக்கு தைராக்சின் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு!

இலங்கையில் முதன்முறையாக தைராக்சின் சத்திரசிகிச்சை குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மொஹமட் ரிஸ்வி தலைமையிலான குழுவினரால் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணுக்கு தைராக்சின் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தெற்காசிய நாடுகளில் தொண்டை வழியாக துவாரமிட்டு, அதற்குள் கெமராவை செலுத்தி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.எனினும், வாய் வழியாக கெமராவை செலுத்தி அதன் மூலம் தைராக்சின் சத்திரசிகிச்சை இலங்கையில் முதன்முறையாக இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள சில வைத்தியசாலைகளில் மாத்திரமே இந்த சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்னரே இந்தியாவில் இதுபோன்ற சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தெற்காசியாவில் உள்ள வைத்தியசாலைகளில் இடம்பெற்றுள்ள சத்திர சிகிச்சைகளில் நான்காவது அறுவையற்ற சத்திர சிகிச்சை இதுவென வைத்தியர் மொஹமட் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த முறைமை மூலம் சத்திரசிகிச்சை மேற்கொண்டால் தழும்புகள் ஏற்படாது என வைத்தியர் மொஹமட் ரிஸ்வி மேலும் தெரிவித்துள்ளார்.