தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டன.(வீடியோ)

நாளை நனைபெறும் உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்கான  வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலைய மூத்த பொறுப்பதிகாரி தலைமையில் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என 17 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. 243 வட்டாரங்களில் 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நாளைக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. வாக்கு எண்ணும் பணிகள் அந்த அந்த வட்டாரத்திலேயே மாலை 5 மணிக்கௌ ஆரம்பமாகின்றன.

Get real time updates directly on you device, subscribe now.