தேர்தல் விதிமுறைகளை மீறி நியமனம். – உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தொண்டராசிரியர்கள் முடிவு!

அரசாங்கம் தேர்தல் விதிமுறைகளை மீறி தெரிவு செய்யப்பட்ட சில தொண்டராசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வடமாகாண தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தினார்கள். அதன் போது கருத்து தெரிவிக்கையில் ,

இன்றைய தினம் நாங்கள் போராட்டம் நடத்துகின்றோம். ஆளுநர் கொழுப்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் பல வருடங்களாக நியமனம் கோரி வருகின்றோம். எமக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி அலரி மாளிகையில் 182 தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது.

தேர்தல் காலத்தில் நியமனத்திற்கான வாக்குறுதிகளை வழங்கி விட்டு தேர்தல் முடிந்த பின்னர் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறல் ஆகும். அதேவேளை அன்றைய தினம் நியமனம் வழங்கப்படவுள்ளவர்களில் பலர் அரசியல் செல்வாக்கு காரணமாக நியமனம் பெறவுள்ளவர்கள்.அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைகளத்தின் கீழ் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வுள்ளது. இவ்வாறன நிலையில் நாம் புறக்கணிக்கப்பட்டால் , எமக்கான நிரந்தர நியமனம் கிடைக்க பெறும் வரையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். என தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like