கணவனை கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற மனைவி செய்த தந்திரம்!! ஓடித் தப்பிய கொள்ளையர்கள்!! (வைரலாகும் காணொளி)

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ககோரியில் நேற்று காலை வீட்டிற்கு வெளியே நின்ற நபரை மர்ம கும்பல் தாக்கியது. முதலில் இரண்டு பேர் அடித்தனர். பின்னர் நான்கு பேர் அவர்களுடன் சேர்ந்து அந்த நபரை கொடூரமாக தாக்கினர். அந்த கும்பலில் ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதற்கிடையே அந்த நபரின் மனைவி வீட்டிற்குள்ளே இருந்து வந்து தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அவர் கையில் உள்ள துப்பாக்கியை பார்த்து பயந்து போன மர்ம கும்பல் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றது.

இச்சம்பவம் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை காப்பாற்ற மனைவி துப்பாக்கியுடன் வந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like