பாடகியாக அறிமுகமாகிறார் விஜயின் மகள்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜயின் மகள் திவ்யா சாஷா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் 62 ஆவது படத்தின் படப்பிடிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.
விஜயின் மகள் திவ்யா சாஷா ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதில் சிறு வயது மகளாக மீனாவின் மகள் நைனிகாவும், சற்று வயது கூடியதும் அதே கதாப்பாத்திரத்திற்கு திவ்யா சாஷாவும் நடித்திருந்தனர்.
இவர் தந்தை விஜய், பாட்டி ஷோபா சந்திரசேகரன் போல பாடும் திறமை கொண்டவர். தற்போதே பல பாடல்களை அருமையாகப் பாடி பாராட்டுகளைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திவ்யா சாஷா விரைவில் திரைப்படத்தில் பாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய், மகளை தனது படத்தில் பாடகியாக அறிமுகப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.