தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நன்றிகளை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர (வீடியோ)

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் அவர்களின் உறவினர்கள் தமது நன்றிகளை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர்
ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் சிவன் அறக்கட்டளை நிறுவன தலைவருமான கணேஸ்வேலாயுதம் தலைமையில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்றுகாலை யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுனர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரேவை இன்றையதினம் சந்தித்தனர்

மதியரசன்,சுலக்சன் மற்றும் தர்சன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளின் உறவினர்களே இவ்வாறு ஆளுனரை சந்நித்து தமது நன்றிகளை வெளிப்படுத்தினர்
குறித்த கைதிகளின் வழக்குகள் அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்ட வேளை அவர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டுவந்து நிலையில் வட மாகாண ஆளுனர் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடுகள் செய்து இவ்விடயத்தில் தமக்கு பாரிய உதவிகளை செய்ததாக உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்-குரல்-
அத்துடன் இந்த விடயத்தில. ஜனாதிபதி அவர்கள் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாக இவ்வழக்குகழ் மீண்டும் வ்வுனியாவிற்கு மாற்றப்பட்டமை மகிழ்ச்சி அழிப்பதாகவும் தெரிவித்த இவர்கள் வழக்குகளை துரிதப்படுத்தி தமது உறவினர்களை விரைவில் வடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்
போராட்டங்கள் மாத்திரம் தீர்வை பெற்றுத்தராதென்றும் சட்டரீதியாக இவ்விடயம் அணுகப்பட்டமையே இவ்வழக்குகள் மீண்டும் வ்வுனியாவிற்கு மாற்றப்பட்டதற்கு காரணம் என ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் சிவன் அறக்கட்டளை நிறுவன தலைவருமான கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்-
வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட்கூரேவும் இங்கு கருத்து தெரிவித்தார் –