பிரித்தானிய இளவரசர் எட்வட் நுவரெலியாவுக்கு விஜயம்!

பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி ஷோபி ஆகியோர் நுவரெலியாவுக்கு நேற்று(வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டனர்.

விசேட உலங்கு வானுர்தி மூலம் நுவரெலியா நகரசபை மைதானத்தை வந்தடைந்த பிரித்தானிய அரச தம்பதியரை, நுவரெலியா மாவட்ட அரச செயலாளார் எம்.பி.ஆர். புஸ்பகுமார தலமையிலான குழுவினர் வரவேற்றனர்.

அதன்பின் நுவரெலியாவில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மென்கெப் பாடசாலைக்கு சென்ற எட்வட் தம்பதியினர் அங்கு சிறுவர்களடன் சிறுது நேரத்தினை செலவழித்தனர்.

அதனை தொடர்ந்து கந்தப்பளை கோட்லோஜ் பெருந்தோட்டப்பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள தேயிலை மலைகளையும் பார்வையிட்டனர்.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருத்தினராக பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like