மனிதர்களை போல் சோப் போட்டுக் குளிக்கும் எலி!! (வைரலாகும் காணொளி)

மனிதர்களை போல் சவர்க்காரம் இட்டு குளிக்கும் எலியின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

பெரு நாட்டை சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் எலி ஒன்றை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். ஒருநாள் குளியறையில் எலி மனிதர்களை போன்று சவர்க்காரம் இட்டு குளிப்பதை பார்த்த கோரி, அதனை காணொளி எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மனிதர்களைப் போலவே கை கால்களையெல்லாம் சோப்பு போட்டு தேய்த்து குளித்தது அந்த எலி.குளித்த எலி இதனைக் கண்டு வியந்துபோன ஜோஸ் கோரியா உடனடியாக தனது போனில் எலி குளிப்பதை வீடியோ எடுத்தார். எலியின் பிரைவெசி பாதிக்கக்கூடாது என்று நினைத்த அவர் எலிக்கு தெரியாமலே அதுகுளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.வைரலாகும் வீடியோ இந்த வீடியோவை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கோரியா சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்.

தற்போது வரை இந்த வீடியோவை 40 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.30 வினாடிகள் குளிப்பு 30 வினாடிகளுக்கும் மேலாக அந்த எலி சோப்பு போட்டு குளித்துள்ளது. குளித்தவுடன் எலி ஓட்டம் பிடித்துள்ளது.தனியுரிமையை பாதுகாக்க.. இதுகுறித்து பேசிய கோரியா அந்த எலி தன்னை சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்பியதாக நினைக்கிறேன் என தெரிவித்தள்ளார்.
தான் விலங்குகள் மீது அதிக அக்கறை கொண்டவன் என்பதால் எலியின் தனியுரிமையை பாதுகாக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.தான் அந்த எலியை காயப்படுத்த விரும்பவில்லை என்றும் அதனால் அமைதியாக அதனை படம்பிடித்துவிட்டதாகவும் ஜோஸ் கோரியா தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ மூலம் மிகவும் விரைவாக பிரபலமடைந்துவிட்டதாகவும் கோரியா ஆச்சரியமடைந்துள்ளார்.
இதனடிப்படையில், இணையதளத்தில் 37 லட்சத்திற்கும் மேலானோர் பார்கையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பலர் தன்மீது உள்ள சவர்க்காரத்தையே எலி துடைக்க முற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காணொளியில் மனிதர்களை போன்று குளிப்பதால் எலி பலரை கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like