இப்படியும் நடக்கின்றது…..மகளின் ஆசிரியருடன் ஓடிப் போன நான்கு பிள்ளைகளின் தாய்!! நடுத் தெருவில் தவிக்கும் கணவன்!!

வவுனியாவில் நான்கு பிள்ளைகளையும், கணவனையும் கைவிட்டுவிட்டு திடீர் காதலனுடன் தலைமறைவாகியுள்ளார் குடும்ப பெண் ஒருவர். 39 வயதான குடும்ப பெண் ஒருவரே, 26 வயதான ஆசிரியருடன் தலைமறைவாகியுள்ளார். இந்த காதல் வவுனியாவில் அரங்கேறியுள்ளது.
வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் வசிக்கும் 39 வயதான பெண்மணிக்கு, பருவமடைந்த 16 வயதான மகளும் 15, 8,5 வயதுகளில் இன்னும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
மகளுக்கு ஆங்கிலம், கணிதம் கற்பிக்க ஆசிரியர் ஒருவர் வருவது வழக்கம். அவருக்கு வயது 26. கணவன் கூலி வேலைக்கு சென்ற பின்னர், ஆசிரியருடன் அவர் காதல் வசப்பட்டு, உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் சேகரித்து வைத்திருந்த பணம், நகை, உடுபுடவைகளுடன் கள்ள காதலனுடன் ஓடிச்சென்றுவிட்டார்.
இந்தநிலையில், சில தினங்களிற்கு முன்னர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண், குடும்பத்தை விட்டு தான் சென்ற விட்டதாகவும், காதலனுடன் வசிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனைக் கேட்ட பொலிஸார் செய்வதறியாது திகைத்து நின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like