அதி சொகுசு வீட்டில் தங்கியிருந்து பெண் ஒருவர் செய்த வேலையினால் கதிகலங்கிப் போன பொலிஸார்

யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரினால் பாரிய அளவு கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.வென்னப்புவ நகரத்திற்கு அருகில் சொகுசு வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பெண் ஒருவர் மாத்திரம் தங்கியிருப்பதாக கூறப்படும் வீட்டிற்கு வந்து செல்பவர்கள் குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், பொலிஸார் அதிகாரிகளினால் இரகசியமாக அவ்விடத்திற்கு சென்று சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது பெண் ஒருவர் கசிப்பு காய்க்கும் விடயம் தெரியவந்துள்ளது.அதன் பின்னர் குறித்த வீட்டை சுற்றி வளைத்த பொலிஸ் அதிகாரிகள் பெருந்தொகை சட்டவிரோத சாராயங்களை மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டினுள் அந்த பெண் கசிப்பு களஞ்சியறை ஒன்றை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு தொடர்புடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண் குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவராகும். 
இந்த வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகை அடிப்படையில் குறித்த வீட்டை அவர் பெற்று கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like