அச்சுவேலியில் இந்தியத்துணைத் தூதருக்கு சேவை நயப்பு விழா!

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் அவர்களுக்கான சேவை நயப்பு விழா 01.02.2018 அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்துக் குருமார் அமைப்பு , அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயச் சமூகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பாடசாலை அதிபர் ஸ்ரீரதி முருகசோதி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறைத் தலைவர் பிரம்மஸ்ரீ ப.பத்மநாத சர்மா, இந்துக் குருமார் அமைப்பின் ஆலோசகர் கி.நாரயணக் குருக்கள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதிமுதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சி.ரமணராஜா, கோப்பாய்க் கோட்டக் கல்வி பணிப்பாளர் ந.சிவநேசன் ஆகியோர் வாழ்த்துரைகளையும் இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள் எழிலுரையையும் வழங்கினர்.

விழாவின்போது துணைத்தூதருக்குப் பாடசாலை சார்பிலும் இந்துக் குருமார் அமைப்பின் சார்பிலும் பெற்றோர் பழைய மாணவர்கள் சார்பிலும் அச்சுவேலியில் உள்ள தனியார் நிறுவனங்கள் சார்பிலும் மாலைகள் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வின்போது இந்தியத்துணைத் தூதரகத்தால் கடந்த ஈராண்டுகளுக்கு முன்னர் பாடசாலைக்கென வழங்கப்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு மாணவர்களால் பல்லிய நிகழ்வு ஆற்றுகை செய்யப்பட்டது.

விழாவில் ஓய்வு பெற்ற பிரதிக்கல்வி பணிப்பாளர் வே.பாலசுப்பிரமணியம், பாடசாலையின் பழைய மாணவர் எந்திரி வை. சதானந்தன், டாக்டர் புவிராசா, யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் பிரதீபா விமலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.