யாழ் பல்கலைக்கழகத்தில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமானது தனது 40வது வருட பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து உள்நாட்டு வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் இவலூஷன் பிறைவட் லிமிடட்டின் பங்களிப்போடு மாபெரும் மருத்துவக் கண்காட்சி – 2018ஐ நடாத்தவுள்ளது.

மேற்படி கண்காட்சியானது சித்திரை மாதம் 4ம்,5ம்,6ம் மற்றும் 7ம் திகதிகளில் யாழ் மருத்துவபீட வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன் யாழ் மருத்துவபீட கண்காட்சியானது 2012ம் ஆண்டில் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி கண்காட்சியானது அடிப்படை உயிரியல் விஞ்ஞானம் நடைமுறை சவால்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பம் துறை வழிகாட்டல் குழந்தை இளமைப்பருவ வளர்ந்தோர்ர மற்றும் வயோதிப உடல் உள ஆரோக்கியமும அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் எனும் பிரதான தலைப்புகளினூடும் அவற்றிக்கூடாக பல உபதலைப்புக்களினுடனும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இத்தோடு மருத்துவம் சார்ந்து நின்றுவிடாது கண்காட்சியை முன்னிட்டு புகைப்படப்போட்டி பாடசாலை மாணவர்களுக்கான வினாடிவினாப் போட்டியும் அவற்றிற்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

வயது எல்லைகளின்றி அனைவரும் வருகை வந்து பயன்பெறக்கூடிய வகையில் கண்காட்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காட்சிப்படுத்தல்கள் விழிப்புணர்வுகள் விளக்கவுரைகளோடு மட்டும் நின்றுவிடாமல் இலவச அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் அதனூடாக விளக்கங்களும் தேவைப்படின் மேலதிக பரிசோதனைகள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்களும் இங்கு விளங்கப்படுத்தப்படவுள்ளன.