யாழ் இந்து கல்லூரியின் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோல்விழா (வீடியோ)

இன்று காலை கல்லூரி அதிபர் சதாநிமலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் சின்மியா மிசன் சுவாமிகள் மற்றும் தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தானத்தின் தலைவர் ஆறுதிருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 
இங்கு உரையாற்றிய ஆளுநர் றெயினோல்குரே 
கல்வியில் நாம் இலக்கை அடைய வேண்டுமானால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒரு இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியது அவசியமாகின்றது. பாரம்பரிய செல்வம் இல்லாது நாமே எமக்காக தேடிக்கொள்ளும் செல்வம்தான் கல்வி. பெற்றோர்களே ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் கல்விக்காக நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்கும் ஊக்கத்தினை கைவிடகூடாது என்று நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். 
எனக்கு பலர் தெரிவித்து நான் அறிந்ததற்கு அமைய முன்னைய காலத்தில் வீதி விளக்குகளில் இருந்து படித்தவர்கள், முருங்கங்காய் சொதியும் சோறும் சாப்பிட்டு வறுமையில் படித்தவர்கள் பின்னர் பேராசிரியர்கள் மாதிரி, வைத்தியர் மாதிரி பொறியியலாளர்கள் மாதிரி வந்திருப்பதனை நான் அறிந்திருக்கின்றேன். தற்போது சகல வசதிகளும் இங்கே கிடைக்கப் பெற்றிருக்கின்றது. இதனை பயன்படுத்தி படிப்பிலே முன்னேற்றம் அடைய வேண்டும் மீண்டும் யாழ்பாணத்தின் கல்வித் தரத்திரனை பழைய மாதிரி கொண்டு வர வேண்டும் என மாணவர்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.