ரயிலில் மோதுண்ட உழவுஇயந்திரம்!! மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி!! ஏறாவூரில் பயங்கரம்!!

பாதுகாப்பற்ற கடவையால் பயணித்த சிறிய ரக உழவு இயந்திரமொன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (25) மாலை 5.35 மணியளவில் ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில், சிறிய ரக உழவு இயந்திரத்தின் சாரதி உழவு இயந்திரத்திலிருந்து பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.விறகு ஏற்றிச்சென்ற இந்த உழவு இயந்திரம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் செல்லும்போது, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார்
 தெரிவித்தனர்
.
இவ்விபத்தில் உழவு இயந்திரத்தின் இழுவைப்பெட்டியும் ரெயில் வண்டியின் முன்பகுதியும் சேதமடைந்துந்துள்ளன.இச் சிறிய உழவு இயந்திரம் தண்டவாளத்தில் குறுக்கிட்டபோது, இயந்திரம் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.பாதுகாப்பு கதவு இல்லாத இக்கடவையில் கடந்த காலங்களிலும் பல தடவைகள் இவ்வாறான விபத்துகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like