தோனிக்கு பத்ம பூஷண் விருது

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், இசையமைப்பாளர் இளையராஜா, குலாம் முஷ்தபா கான், பரமேஸ்வரன் ஆகியோருக்கு 2018-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட 9 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தோனியை அடுத்து, ஸ்னூக்கர் வீரர் பங்கச் அத்வானிக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எடை தூக்குதல் வீரர் சாய்கோம் மிரபாய் சானு, டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

Get real time updates directly on you device, subscribe now.