அசௌகரியத்திற்குள்ளாகி வரும் வவுனியா புதிய பேருந்து நிலையம்

வவுனியா புதிய பேருந்து நிலையம் பல முரண்பாடுகளின் மத்தியில் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வெளிமாவட்ட தூர சேவைக்கான பயணங்களை மேற்கொள்வதில் பாரிய அசௌகரியத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையமானது பிரத்தியேகமாக இரு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களுக்கான சேவை , உள்ளூர் சேவை இந் நிலையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட குளப்பகரமான சூள்நிலையை தற்காலிகமாக தீர்ப்பதற்காக உள்ளூர் சேவைகள் என மெயரிடப்பட்ட பகுதியானது இ.போ.ச வின் உள்ளூர் சேவைக்கும் வெளிமாவட்ட சேவைக்கான கட்டடம் தனியார் உள்ளூர் சேவைக்குமாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. 
ஆனால் வெளிமாட்டங்களிற்கான தூர சேவைகளுக்கான பேருந்துகள் பயணிகளை புதிய வவுனியா பேருந்து நிலையத்திற்கும் அனுமதிக்கப்படுவதில்லை இதனால் பேருந்து நிலையத்திற்கு வெளியில் வீதியோரத்திலிருந்தே பயணிகளை ஏற்றிச்செல்கின்றன எனினும் தற்போது அதற்கும் பொலிசார் அனுமதி மறுத்து வாகனம் நிறுத்தத் தடை என பலகையிடப்பட்டுள்ளது இதனால் வெளியூர் தூர சேவைக்கான பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு தொடர்பில்லாமல் புறம்போக்காக நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் வெளிமாவட்ட சேவைக்கான பெயர்ப்புகள் பொறிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பேருந்து நிலையத்தினுள் நீண்ட நேரம் காவலிருக்க பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு அப்பாற்பட்டு தரித்து நின்று செல்வது மக்கள் அறிய வாய்ப்பில்லை நீண்ட நேரமல்ல காத்திருந்து திரும்பி செல்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இவ்வாறான விடையங்களை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தின் பெயர்ப்பலகைகள் உள்ளூர் சேவைக்குரியதாக மாற்றப்படவேண்டும் அதுமட்டுமல்லாமல் வெளிமாவட்ட சேவைகளுக்கான பேருந்து தரிப்பிடத்திற்கான இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனவே உரிய அதிகாரிகள் மக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.