வடக்கின் சில பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(26) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், நாளை வெள்ளிக்கிழமை(26) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய இலங்கை மின்சார சபையின் சேவைக்குட்பட்ட கிளிநொச்சிப் பிரதேசத்தில் வற்றாப்பளை, முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை, மாஞ்சோலை வைத்தியசாலை, முல்லைத்தீவு விமானப்படை- 1 மற்றும்-2, முல்லைத்தீவு 59 ஆவது படைப்பிரிவு (14ESR-01 மற்றும் 14ESR-01-2), SFHQ வற்றாப்பளை, குமுழமுனை பல நோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை, 12 VIR இராணுவ முகாம், 16 ESR இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் ஆசிக்குளம்., சிதம்பரபுரம், கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்ககுளம், பெரியகூமரசஙகுளம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like