சர்வதேச தொழில்நுட்ப போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவன்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற யாழ் மாணவருக்கே இதற்கான தகுதி கிடைத்துள்ளது.

இந்த போட்டி மற்றும் கண்காட்சி அடுத்தமாதம் 1ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையில் தாய்லாந்தின் பாங்கொங் நகரத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் பல்கலைக்கழக்கத்தில் கல்வி பயிலும் இந்த மாணவன் கணிதம் தொடர்பிலான பிர்சசனைகளுக்கு மிக எளிதான முறையில் தீர்வைக்காணக்கூடியதான உபகரணம் ஒன்றை அமைத்துள்ளார். இதனை காட்சிப்படுத்திய பின்னர் இந்த சர்வதேச கண்காட்சிக்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.

இது மாத்திரமன்றி பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களை தயாரித்ததன் மூலம் இவர் சர்வதேச ரீதியில் 81 விருதுகளையும் ,தேசிய ரீதியில் 32 விருதுகளும் பெற்றுள்ளார்.

97 நாடுகளை உள்ளடக்கிய சுமார் 1000 பல்கலைக்கழக மாணவர்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.