யாழ். சிற்­றங்­கா­டி­யில் சாந்தி செய்­யப்­பட்­டது!

யாழ்ப்­பா­ணம் பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கில் உள்ள சிற்­றங்­கா­டிக் கடைத்­தொ­கு­தி­யில் மாந­கர சபை­யின் ஏற்­பாட்­டில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் சாந்தி செய்­யப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய பேருந்து நிலை­யத்­துக்கு அண்­மை­யில் உள்ள சிற்­றங்­கா­டி­யில் பணி­பு­ரி­ப­வர்­கள் மற்­றும் அவர்­க­ளின் உற­வி­னர்­கள் தொடர்ச்­சி­யாக இறந்­த­னர் என­வும் அதற்கு அங்கு பேய் நட­மாட்­டம் இருப்­பதே கார­ணம் எனவும் வர்த்­த­கர்­க­ளால் கூறப்­பட்டு வந்­தது.

இத­னால் கொழும்பு சுகா­தார அமைச்சு இது தொடர்­பாக விசா­ரணை செய்து அறிக்­கை­யி­டு­மாறு பணிக்­கப்­பட்­டி­ருந்­தது. கொழும்பு சுகா­தார அமைச்­சின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய அண்­மை­யில் சிற்­றங்­காடி பகு­தி­யில் சுகா­தா­ரப் பிரி­வி­னர் ஆய்வை மேற்­கொண்­ட­து­டன் அங்­குள்­ள­வர்­க­ளி­டம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். மேலும் இறந்­த­வர்­கள் தொடர்­பி­லும் ஆரா­யப்­பட்­டது.

இந்­த­நி­லை­யில் புதி­தாக அமைக்­கப்­பட்ட சிற்­றங்­கா­டி­ யில் பூஜை எது­வும் இடம்­பெ­றா­மை­யா­லும், பேய் உள்­ளது என மூட நம்­பிக்கை மக்­கள் மத்­தி­யில் உலா­வி­ய­தா­லும் மக்­க­ளது மன­நி­றை­வுக்­காக அங்கு சமய முறைப்­படி சாந்தி, காவல் போன்­றன செய்­யப்­பட்­டன எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like