உலகின் அழகிய ஆண்!

உலகின் அழகிய ஆணாக பாலிவுட் நட்சத்திரம் ஹிர்த்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் உலகின் அழகான ஆண்களுக்கான டாப் 10 பட்டியலை வேர்ல்ட்ஸ் டாப் மோஸ்ட்.காம் என்ற இணையதளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலகின் அழகான ஆண்கள் பட்டியலைத் தற்போது அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

ட்ராய், மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித், வேர்ல்ட் வார் இசட் உள்ளிட்ட படங்களில் நடித்த பிராட் பிட், ஹாரி பார்ட்டர் படங்களில் நடித்துள்ள ராபர்ட் பேடின்சன், டாம் க்ரூஸ் ஆகிய ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்கள், இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், இதர மொழி முன்னணி கதாநாயகர்கள் உள்ளிட்ட பலர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

இவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் உலகிலேயே அழகிய ஆண்களுக்கான பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதே இணையதளம் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருந்த ஹிர்த்திக் ரோஷன் இந்த ஆண்டு முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like